கொரோனா உச்ச அபாய வலயமான புத்தளத்தில் இருந்து முல்லைத்தீவிற்குள் நுழைந்த 16 பேர்..!

0

உச்ச அபாய வலயமான புத்தளம் மாவட்டத்திலிருந்து நேற்று முன்தினம் முல்லைத் தீவு மாவட்டத்திற்குள் 16 பேர் நுழைந்திருக்கும் நிலையில், அவர்கள் அனுமதி பெற்றே நுழைந்துள்ளதாக மாவட்ட செயலர் க.விமலநாதன் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் புத்தளத்திலிருந்து 9 பேர் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தொடர்பாக கவனம் செலுத் தப்பட்டதை தொடர்ந்து சுகாதார பிரிவினால் தனிமைப்படுத்தப்பட்டனர்.


இந் நிலையில் நேற்று முன்தினம் புத்தளம் மாவட்டத்திலிருந்து 16 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட செயலருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் புத்தளம் மாவட்ட செயலரின் அனுமதியுடன் முல்லைத்தீவுக்குள் நுழைந்துள்ளதாகவும், இனிமேல் எவரையும் அனுப்பவேண்டாம்.


என புத்தளம் மாவட்ட செயலருக்கு தாம் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியிருக்கின்றார். ஆனால் புத்தளம் மாவட்டம் அதிக ஆபத்தான வலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


இந்நிலையில் புத்தளம் மாவட்டத்திலிருந்து இரத்த பரிசோதனை செய்யப்படாமல் இவ்வாறு மாகாணம் தாண்டி, மாவட்டம் தாண்டி நுழைவது ஆபத்தானது என அரசாங்கமே கூறும் நிலையில், இது தொடர்பாக பொறுப்பு வாய்ந்தவர்கள் அவதானமாக இருப்பதுடன், மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.