முதலில் என்னைத் தேர்வு செய்யாத போது இரவெல்லாம் அழுதேன்..!

0

டில்லி அணிக்கு முதலில் என்னைத் தேர்வு செய்யாத போது இரவெல்லாம் அழுதேன் என இந்திய கப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

மாணவர்களுடன் இணையம் வழியாக உரையாடிய கோலி,

முதல் தடவையாக மாநில அணிக்கு என்னைத் தேர்வு செய்யாத போது, அது பின்னிரவு என நினைக்கிறேன், மனம் உடைந்து அழுதேன். காலை மூன்று மணி வரை அலறினேன். என்னால் நடந்ததை நம்ப முடியவில்லை.


ஏனெனில் நான் நன்றாக விளையாடி வந்தேன். எல்லாமே சரியாக அமைந்த தருணம் அது. நன்கு விளையாடி வந்த நிலையில் அணியில் என்னைச் சேர்க்கவில்லை.

ஏன் என்னைத் தேர்வு செய்யவில்லை என என் பயிற்சியாளரிடம் இரண்டு மணி நேரம் பேசினேன். நியாயமே இல்லை எனக் கருதினேன்.


ஆனால் ஆர்வமும் உழைப்பும் உங்களுக்கு கிடைக்க வேண்டியதை நிச்சயம் பெற்றுத் தரும் என்று பேசினார்.

விராட் கோலி, 2006-ல் டில்லி அணிக்குத் தேர்வானார். 2008-ல் யு-19 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கப்டனாக நியமிக்கப்பட்டு கோப்பையை வென்றார்.


இதன் பிறகு இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்குத் தேர்வானார்.