யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயது சிறுமியின் சடலம் மீட்பு..!

0

யாழ். இருபாலைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயதுச் சிறுமியொருவர் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


மேற்படி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் சந்தியா (வயது- 14) எனும் சிறுமியே வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


சிறுமியின் இறப்பு தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இதேவேளை தொடர் ஊரடங்கு காரணமாக வட பகுதி உட்பட நாடளாவிய ரீதியாக சிறுவர்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் அதிகரிக்கப் பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.