வாக்காளர்களை அழைத்துச் சென்ற விவகாரம்; மங்களவை சீ.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு..!

0

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, குற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.


கடந்த ஜனாதிபதி தேர்தலில் மன்னாரிலிருந்து புத்தளத்துக்கு வாக்காளர்களை கொண்டு வருவதற்காக, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 225 பஸ்களை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்வதற்கு அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


நாளைய தினம் அவரை சி.ஐ.டி இல் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை குறித்த விடயம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனிடமும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.