தனது சட்டத் திறமையால் ரஞ்சனை சிறை மீட்ட சட்டத்தரணி சுமந்திரன்..!

0

நாட்டில் தற்போது சட்ட ரீதியாக ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்க இன்று நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டார். அவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டது.


இந்த வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவிற்காக சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையானார்.

நாட்டில் சட்ட பூர்வமான ஊரட்கு சட்டம் எதுவும் விதிக்கப் படவில்லையென சுமந்திரன் இதன் போது வாதிட்டார். இதனை தொடர்ந்து ரஞ்சனிற்கு பிணை வழங்கப்பட்டது.


பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுமந்திரன்,

வெறும் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டு இந்த ஊரடங்குச் சட்டத்தை அமுல் செய்ய முடியாது. தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்திற்கு சட்டவலு இல்லை.

அதனை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தோம். நீதிமன்றம் அமுலில் உள்ளதாக பொலிசார் சொல்ல முயன்றனர்.

சட்ட பூர்வமாக ஊரடங்கு தற்போது அமுலில் இல்லை, நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டே அனைவரும் இந்த ஊரடங்குச் சட்ட அறிவிப்பிற்கு கீழ்ப் படிந்துள்ளனர் என்பதை சுட்டிக் காட்டினோம் என்றார்.


இதேவேளை இதற்கு முன்னரும் 52 நாள் ஆட்சிக் குழப்பம், ரஞ்சன் போன்றோருக்காக தனது சட்டப் புலமையை காட்டிய சுமந்திரன் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள், ஆனந்த சுதாகரன் தொடர்பில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றாரோ என எண்ணத் தோன்றுகிறது.


அத்துடன் குறித்த சட்ட நடவடிக்கை காரணமாக ஏனையவர்களும் இவ்வாறான தவறுகளை செய்து சட்டத்தில் இருந்து தப்புவதுடன் கோரோனா நோய் காவிகளாக மாறக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.