வவுனியா பொது வைத்திய சாலையில் சிறுமி திடீர் மரணம்; கொரொனாவா என சந்தேகம்..!

0

வவுனியா பொது வைத்திய சாலையில் தேக்கவத்தையை சேர்ந்த சிறுமி, சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் மாலை அனுமதிக்கப் பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி மரணமடைந்தார்.


குறித்த சிறுமி, வவுனியா – தேக்கவத்தையை சேர்ந்த அயிஸ்டன் சர்மி என்ற 7 வயதுடையவரென தெரிய வந்துள்ளது.


இதேவேளை குறித்த சிறுமிக்கு கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளிற்காக அனுராதபுரம் வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


குறித்த சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வவுனியா வைத்திய சாலையின் அவசர சிகிச்சைபிரிவு தொற்று நீக்கல் செய்யப்பட்டுள்ளது.