இலங்கையின் ஊரடங்கு தளர்வும்; சிங்கப்பூரின் தற்போதய அவல நிலையும்..!

0

ஒரு மாத காலத்திற்கு முன்னர் கொரோனா வைரஸ் தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்கப்பட்ட நாடு சிங்கப்பூர் புகழப்பட்டது.

உலகின் ஏனைய நாடுகள் விதித்துள்ள கடுமையான முடக்கல் நடவடிக்கைகளை விதிக்காமலே சிங்கப்பூர் கொரோனா வைரசினை கட்டுப்படுத்தியுள்ளது என்ற எண்ணம் காணப்பட்டது.

அதன் பின்னர் இரண்டாவது சுற்று வைரஸ்தாக்கம் நிகழ்ந்து. மார்ச் 17 ம் திகதிக்கு பின்னர் சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 266 லிருந்து 5900 ஆக அதிகரித்துள்ளது.


மேற்கு ஐரோப்பாவின் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளும் அமெரிக்காவும் தமது நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் என தெரிவித்த வண்ணமுள்ளன.

அதேவேளை சிங்கப்பூரின் சனத்தொகை 5.7 மில்லியன் என்பதுடன் அது பரப்பளவில் யாழ்ப்பாணத்தை விட சிறியது என்பதை கருத்தில் கொள்ளும் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக காணப்படுகின்றது.

1. சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் நெருக்கமாக வாழும் பகுதிகள் அலட்சியம் செய்யப்பட்டுள்ளன.

2. இரண்டாவது முடக்கலிற்கு உட்படாத நகரில் கொரோனா வைரஸ் எவ்வளவு வேகமாக பரவக் கூடும் என்பது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.


சிங்கப்பூரில் ஏப்பிரல் மாதம் வரை நிலைமை கட்டுப்பாட்டிற்குள் காணப்பட்டது.

எனினும் அரசாங்கத்தின் பரிசோதனைகள் இடம் பெறாத பகுதிகள் அதிகரித்ததுடன் நாளாந்த பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூர் கடைப்பிடித்த நிதானமான அணுகுமுறை வெற்றியளிக்க வேண்டும் என்றால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் நோய் பரவுவதை தடுப்பது மற்றும் நோயினால் பாதிக்கப்படக் கூடியவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பது அவசியமாக காணப்பட்டது.


புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நோயாளர்கள் சிங்கப்பூரின் வெளிநாட்டு தொழிலாளர்களுடன் தொடர்பு பட்டவர்களாக காணப்படுகின்றனர்.

இவர்கள் அனேகமாக தென்னாசியாவை சேர்ந்தவர்கள் .நெருக்கமாக வாழ்பவர்கள் சிங்கப்பூரின் ஆரம்ப கட்ட சோதனை நடவடிக்கைகளில் இவர்கள் தவறவிடப் பட்டுள்ளனர்.

தற்போது இவர்கள் தங்கியிருந்த பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இந்த தொழிலாளர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் இந்த வைரஸ் வெளியிலிருந்து வந்ததா ?அல்லது அதிகளவிற்கு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக காணப்பட்டதா என்பது தெரியவில்லை.

எனினும் தொழிலாளர்கள் வாழும் விதம் சமூக தனிமைப்படுத்தலை முன்னெடுப்பதற்கு சாத்தியமற்றது என்பது இதன் மூலம் புலனாகியுள்ளது.இதன் காரணமாக நோய் பரவல் இலகுவாக இடம் பெற்றுள்ளது.

தொழிலாளர்கள் வாழ்ந்த பகுதிகள் எப்போதும் வெடிக்கக் கூடிய குண்டுகள் போல காணப்பட்டன என தெரிவித்துள்ள என சிங்கப்பூரின் சட்டத்தரணியும் முன்னாள் இராஜதந்திரியுமான டொமி கோ,

சிங்கப்பூர் தனது வெளிநாட்டு தொழிலாளர்களை நடத்தும் விதம் மூன்றாம் உலகத்தின் நடவடிக்கைகள் போல காணப்படுகின்றது என அவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.


வெளிநாட்டு தொழிலாளர்களை புறக்கணிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை இதுவென தெரிவித்துள்ள அவர்களை தற்போது நடத்துகின்றது போன்று இழிவான விதத்தில் நடத்தக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள், புதிய விதிமுறைகள், கடுமையான தண்டனைகளை அறிவித்துள்ளது.

சிங்கப்பூரின் அளவு காரணமாகவும், வலுவான அரசாங்கம், சிறப்பாக நிதி வழங்கப்பட்ட சுகாதார சேவை ஆகியவற்றின் காரணமாகவும் அந்த நாட்டினால் வைரசினை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் ஏனைய உலக நாடுகளிற்கு சிங்கப்பூரின் அனுபவத்திலிருந்து இலங்கை உட்பட நாடுகளுக்கு சிறந்த படிப்பினைகள் உள்ளன.

எனினும் ஊரடங்கை தளர்த்தவுள்ள இலங்கை அவற்றை எவ்வளவிற்கு பின்பற்றும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.