ஏப்ரல் குண்டுத் தாக்குதலுக்கு புறம்பாக வேறொரு தாக்குதல் முயற்சி முறியடிப்பு – பொலிஸ்

0

கடந்த வருடம் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்குப் பிறகு மற்றுமொரு தாக்குதலும் நடக்கவிருந்ததாக பொலிஸ் இன்று பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது

விசேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் பேச்சாளர் இந்த தகவலை தெரிவித்ததுடன், கைது செய்யப்பட்ட சிலரிடம் இருந்து இந்த தகவல் வெளிவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முஸ்லீம் அடிப்படைவாத அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத் தனமான பயங்கரவாத தாக்குதல் காரணமாக 350 க்கும் அதிகமானவர்கள் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த ஏப்ரல் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பலமான அரசியல் கட்சி ஒன்று அதிகார, பண உதவிகளை வழங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அதாவது சர்கான் குழுவினரின் இறுதி தங்குமிடத்தில் இருந்து மீட்கப்பட்ட 43 கோடிக்கும் அதிகமான 5000 ரூபா தாள்களை கொண்ட புதிய பணத்தாள்கள் மூட்டையே அதற்கு சாட்சியாகும்.