மே 11ம் திகதி பாடசாலைகளை திறப்பதில் இழுபறி நிலை காணப்படுகிறது – கல்வி அமைச்சர்

0

அனைத்து அரச பாடசாலைகளையும் எதிர்வரும் மே 11ம் திகதி திறப்பதற்கு எடுத்த முடிவில் இழுபறி நிலை காணப்படுகிறதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் உறுதியாக மே 11ஆம் திகதி அன்று பாடசாலைகளை திறப்போம் என்று கூறமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.


மேலும் இது தொடர்பில் சுகாதாரத் துறையினரது ஆலோசனை பெற்றே தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.