பிள்ளையான் கட்சியின் அமைப்பாளர் பேரூந்தில் சாராய கடத்தலின் போது கைது..!

0

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை வடக்கு அமைப்பாளர் சுபராஜ் ஊரடங்கு வேளையில் கடந்த ஞாயிறன்று (12.04.2020) வாழைச்சேனை பகுதியில் இருந்து CTB பஸ்ஸில் சாரயாம் கடத்தி கொண்டு வந்த போது பிடிபட்டுள்ளார்.


இதன் போது CTB பஸ்சின் முகாமையாளர், சாரதி, நடத்துனர் மற்றும் சுபராஜ் போன்றோரே கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.

கடந்தகாலங்களில் தன்னை தமிழ் மக்களுக்காக போராடும் தியாகி என காட்ட முயன்ற இவரே சாராயம் கடத்திய கேவலமான செயலில் ஈடுபட்டுள்ளார்


தற்போதைய இளம் தலைமுறையினர் தமிழர்களின் முழுமையான வரலாறு அறியாது இவரை போன்ற சுயலாப அரசியல் செய்யும் கேவலமான நபர்களின் வார்தையை நம்பி ஏமாறுகின்றனர்.


TMVP கட்சியின் மாநகர சபை உறுப்பினர் செல்வியினால் கூறப்பட்ட எமது இனத்துக்கு எதிரான கருத்தை அடுத்து சுபராஜின் சாராய கடத்தல் TMVP கட்சியின் இலட்சணத்தை காட்டுகிறது.


இதேவேளை அண்மையில் கசிப்புடன் ஈபிடிபி உறுப்பினர் வவுனியாவில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மக்கள் உணவின்றி தவிக்க சாராயம் விற்பனை செய்து சமூகத்தை அழிக்கும் இந்த சமூக விரோதிகளை மக்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.