தற்போது தேர்தல் வைப்பது மக்களை ஆபத்தில் சிக்க வைக்கும் செயல்..!

0

கொரோனா வைரஸ் அபாயம் நீங்கி விட்டதாக உள்ளூர் மற்றும் உலக சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் வரை பாராளுமன்ற பொதுத் தேர்தலிற்கான திகதி நிர்ணயிப்பதை தவிர்க்கும்படி, தேர்தல் ஆணையாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களான இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், மாவை.சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கையெழுத்திட்டு, இன்று (18) மாலை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிய நீண்ட கடிதத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.


தற்போதைய சூழ்நிலைகளில் தேர்தலை நடத்துவது மிகவும் ஆபத்தானது
மற்றும் பொறுப்பற்றது.

இந்த சூழ்நிலைகளில், ஒரு திகதியை நிர்ணயிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பொதுத் தேர்தலின் முன்னதாக மக்களை கூட்டி தேர்தல் பிரச்சாரம் செய்வது, வாக்கெடுப்பில் மக்கள் கலந்து கொள்வது மக்களை ஆபத்தில் சிக்க வைத்து விடலாமென்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.


அத்துடன், முறையான தேர்தல் பிரச்சாரம் நிகழ்த்தப்பட்டு தேர்தல் நடத்தப்படுவதே முறையான ஜனநாயக நடைமுறை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.