அரச ஊழியர்களுக்கு விசேட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியீடு..!

0

அரச ஊழியர்கள் கடமைக்குத் திரும்புதல் , நேர அட்டவணை உட்பட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய சுற்றறிக்கை அடுத்த வார முற்பகுதியில் வெளிவரவுள்ளது.

எதிர்வரும் திங்கட் கிழமை காலை பொது நிர்வாக அமைச்சின் விசேட கூட்டமொன்றை அமைச்சின் செயலாளர் கூட்டியுள்ளார்.


மாவட்ட அரச அதிபர்கள் கலந்து கொள்ளும் அந்த கூட்டத்தின் பின்னரே சுற்றறிக்கை வெளியிடப்படும்.

இதேவேளை ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுக்கள் நடைபெறுகின்றன.


கொழும்பு , கம்பஹா , கண்டி , புத்தளம் , களுத்துறை , யாழ்ப்பாணம் மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களில் காலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தி இரவு 8 மணிக்கு மீண்டும் அமுலாக்க யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது நாட்டின் சுகாதார நிலைமை குறித்து மருத்துவர்களின் அறிக்கை இன்று கிடைத்த பின்னர் அரசு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமென தெரிவிக்கப்படுகிறது.


அதேவேளை திட்டமிட்டபடி 20ம் திகதி முதல் அலுவலக நடவடிக்கைகளுக்கான புகையிரத சேவைகள் இடம் பெறும் என்பதுடன் அத்தியாவசிய கடமையில் ஈடுபடும் அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.