பூனானை தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து மேலும் 222 நபர்கள் வெளியேற்றம்..!

0

பூனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து மேலும் 222 நபர்கள் மூன்று வார காலம் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் நேற்றுக் காலை (17) ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
இராணுவத்தினால் வழங்கப்பட்ட போக்குவரத்து வசதிகளுடன் கொழும்பு மற்றும் கடவத்த ஆகிய பிரதேசங்களை நோக்கி புறப்பட்ட குறித்த குழுவினருக்கு படையினரால் சிற்றுண்டி உணவுகள், குடி நீர் மற்றும் மதிய உணவுப் பொதிகள் விஷேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கருத்திற் கொண்டு வழங்கப்பட்டுள்ளன.


குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர், வெற்றிகரமாக தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து புறப்பட்ட அவர்களை வழியனுப்பி வைத்தனர்.