வவுனியாவில் கசிப்புடன் ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் ஒருவர் காருடன் கைது..!

0

வவுனியா ஒமந்தை பகுதியில் கசிப்புடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) யின் முக்கியஸ்தர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒமந்தை பகுதியில் சிவப்பு நிற காரில் கசிப்பு இருப்பதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒமந்தை பகுதியில் குறித்த காரினை மறித்து பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தினர்.


சோதனையின் போது வாகனத்திலிருந்து 1500மில்லி லீற்றர் கசிப்பினை பொலிஸார் கைப்பற்றினர்.

கசிப்பினை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வாகனத்தின் சாரதியான ஒமந்தை பகுதியினை சேர்ந்த 37வயதுடைய ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) யின் முக்கியஸ்தரை பொலிஸார் கைது செய்யதுடன் வாகனத்தினையும் கைப்பற்றினர்.


கைப்பற்றப்பட்ட கசிப்பினையும் குறித்த நபரையும் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது நீதவான் பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கினார்.


கொரோனா அச்சம் காரணமாக தற்போது கைது செய்யப்படும் பாரதூரமான குற்றங்களுக்கும் பிணை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.