போலி முகநூலில் அரச அதிகாரிகளை விமர்சித்த 8 பேர் அதிரடிக் கைது..!

0

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க நிர்வாக அதிகாரிகளை போலி முகநூல் மூலமாக விமர்சித்து வந்த ஆசாமிகள் எட்டுப் பேர் நேற்று (16) மாலை காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.போலி முகநூல் கணக்கில் செயற்பட்டு வந்த நபர்கள் தொடர்ச்சியாக அரசாங்க சேவையில் பணியாற்றுகின்ற அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் விமர்சனம் செய்து வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.