வவுனியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஊரடங்கை மீறிய நால்வர் கைது..!

0

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் வாகனங்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.


கொரோனா வைரஸ் தொற்றையடுத்து நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி வீதியில் மோட்டர் சைக்கிள்களில் பயணித்த மூவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த 3 மோட்டர் சைக்கிள்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது துவிச்சக்கர வண்டியும் பொலிசாரால் தடுத்து வைக்கபடபட்டுள்ளது.


கொரோனா தொற்றை தடுக்க அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழக்குமாறு கோரியுள்ள பொலிசார் ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்கள் மீது தகுதி, தராதரமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.