புதிய கொரோனா நோயாளர்கள் சமூகத்தில் காணப்படவில்லை; இராணுவத் தளபதி..!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் சமூகத்திலிருந்து புதிதாக கண்டறியப்படவில்லை. இது நல்லதொரு அறிகுறி. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களே தொற்று நோயாளர்களாக இனங் காணப்பட்டனர், நேற்றும் அப்படியே நடைபெற்றது.


பேருவளையில் சில கிராமங்கள் மூடப்பட்டுள்ளன, வைரஸ் பரவுதலை நாங்கள் தடுத்துள்ளோம். அதேசமயம் மன்னார் தாராபுரம் கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டது.


வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் பலர் இங்கு வர கோரிக்கை விடுக்கின்றனர். ஒரேயடியாக அவர்களை அழைத்தால் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளையும் யோசிக்க வேண்டும்.


எனவே எப்படியும் அரசு அவர்களை அரசு அழைத்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும். அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க இராணுவம் முழு அளவில் உதவுகிறது.”


இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா சற்று முன்னர் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.


இதேவேளை எதிர்வரும் 20ம் திகதிக்குப் பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கானது பகுதியளவில் நீக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.