சுவிஸ் போதகரின் செயற்பாட்டால் யாழில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா..!

0

யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ள தகவல்களின்படி இன்றைய தினம் யாழில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


அவர் கூறியுள்ளதாவது ,

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று தொடர்பில் இன்றைய பரிசோதனையில் இரு இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இவர்களில் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த 8 பேரில் 4 வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.


இன்று 24 பேருக்கான கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.

ஒருவர் இவர்களுக்கு உணவு வழங்கியவர். ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டவர்.


8 பேர் முழங்காவில் பகுதி கடற்படை முகாமில் நாட்டின் வேறு பகுதியை சேர்ந்த வர்கள். தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.


(குறிப்பு: அரியாலை பகுதியில் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரிலும் முதல் கட்டமாக April 1, April 3 திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.


இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.)