புத்தாண்டின் பின்னர் ஊரடங்கு 12 மாவட்டங்களில் முழுமையாக நீக்கப்படும் சாத்தியம்..!

0

தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டமானது புத்தாண்டுக்குப் பின்னர் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் ஆலோசனை செய்து வருவதாக அரசாங்கத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறிப்பாக, அம்பாந்தோட்டை, நுவரெலியா, மாத்தளை, அம்பாறை, திருகோணமலை, மொனராகலை, அனுராதபுரம், வவுனியா, பொலன்னறுவை, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு ஊரடங்கு நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


மேற்படி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டு பிடிக்கப்படாமையே இதற்கு காரணத்தின் அடிப்படையில் இந்த முடிவுக்கு அரசாங்கம் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதேபோல், கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாதுக்க, சீதாவக்க மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பியகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.