ஏப்ரல் குண்டு வெடிப்பு; முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் சகோதரர் புத்தளத்தில் கைது..!

0

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் புத்தளத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த வருடம் நடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.


இவரே முன்னாள் அமைச்சரின் நிதி விடயங்களை கையாண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.