ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஏப்ரல் 20 வரை விளக்கமறியல்; நீதிமன்றம் உத்தரவு..!

0

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தவேளை பொலிஸாரின் கடமைகளை செய்ய இடையூறு விளைவித்தார் எனக் கூறி நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்யப்பட்டார்.
அவரை ஏப்ரல் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.