பொதுத் தேர்தலை மே இறுதியில் அல்லது ஜூனில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்???

0

ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படவிருந்த பொதுத் தேர்தல், கொரோனா காரணமாக காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்பட்டது.


எனினும், குறித்த தேர்தல், மே இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த தேர்தலில், பிரசார நடவடிக்கைகளுக்காக மக்கள் பங்கேற்கும் எந்தவொரு கூட்டத்தை நடத்துவதற்கும் அனுமதி வழங்காமல் இருப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை 1988 ஆம் ஆண்டு ஜே.வி.பி கிளர்ச்சியின் போது, பொது மக்கள் பங்கேற்கும் வகையில், பொது கூட்டங்கள் நடத்தப்படாமல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டமை யாவரும் அறிந்த விடயம்.

அதேபோல் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.


எனினும் மிகவிரைவில் தேர்தலை நடத்தி, நிலையான பாராளுமன்றம் ஒன்றை உருவாக்கும் நோக்கிலேயே பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அத்துடன் பொது மக்களின் நலன்சார்ந்து சிந்திக்க வேண்டுமாயின் இத்தகய சமூக நலன் சார்ந்த செயற்பாட்டை முன்னெடுப்பதை தவிர மாற்று வழி இல்லை.

இதேவேளை யாழ்ப்பாணம், வன்னி உள்ளிட்ட பகுதிகளில் அரச தரப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தல் விதிமுறைகளை மீறி மனிதாபிமானப் பணி எனும் போர்வையில் நுண் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.