பல்கலைக் கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை..!

0

பல்கலைக் கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது மேற்கொண்டுள்ளது

இதற்கமைவாக பல்கலைக் கழகங்களை 3 கட்டங்களில் திறப்பதற்கு தீர்மானிக்கப் பட்டிருப்பதாக பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் இன்றைய தினம் (12) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக தெரிவிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.1ஆவது கட்டம் :

2020 மே மாதம் 4ஆம் திகதி இந்த தினத்தில் பல்கலைக் கழகங்கள் திறக்கப்படுவது கல்வி மற்றும் கல்விசார் பணியாளர் சபைக்காக மாத்திரம் இதில், அழைக்கப்பட வேண்டிய பணியாளர் சபை குறித்து தீர்மானிப்பதற்கு அதிகாரம் முழுமையாக அந்தந்த பல்கலைக் கழக உபவேந்தர்களுக்கு அளிக்கப்படும்.2ஆவது கட்டம் :

2020 மே மாதம் 11ஆம் திகதி இந்த தினத்தில் அந்தந்த கற்கை நெறிகளுக்கான இறுதி வருட மாணவர்களுக்கு மாத்திரம் பல்கலைக் கழகங்களை திறத்தல்.

இதற்கமைவாக, வைத்திய பீட கற்கைநெறியில் 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கும், விசேட பட்டக் கற்கை நெறியில் 4ஆவது ஆண்டு மாணவர்களுக்கும் பொதுவான பட்டக் கற்கை நெறியில் மூன்றாவது வருட மாணவர்களுக்கும் என்ற ரீதியில் அந்தந்த கற்கை நெறிகளுக்கான இறுதி வருட மாணவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் திறக்கப்படும்.3 ஆவது கட்டம் :

2020 மே மாதம் 18ஆம் திகதி இந்த தினத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்காக பல்கலைக் கழகங்கள் திறக்கப்படும்.

இந்த வகையில் பல்கலைக் கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் பொழுது கொரோனா வைரசு தொற்று நிலமையில் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்து கூடிய விரைவில் சுற்றரிக்கையொன்றை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.