கொரோனாவால் இறப்பவர்களின் சகல சடலங்களையும் எரிக்கவும்; விசேட வர்த்தமானி..!

0

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கும் சகலரின் சடலங்களையும் எரியூட்டுமாறு அறிவித்து விசேட அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நேற்று வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் (இறந்த உடல்கள்) எரியூட்டப்பட்டமை தொடர்பில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.


தங்களுடைய மத சடங்குகளின் பிரகாரம், ஜனாஸாக்களை எரிக்கக் கூடாது என்றும் புதைப்பதற்கு வழி அமைக்குமாறும் முஸ்லிம் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையிலேயே சகல சடலங்களையும் எரியூட்டுமாறு பணித்து குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.


இதேவேளை அண்மையில் சர்வதேச மன்னிப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் இவ்விடயத்தில் சிறுபான்மையினரின் சமய சம்பிரதாயங்களை மதித்து செயற்படுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.