சுவிஸ் விளையாட்டுத் துறை அமைச்சின் பயிற்றுவிப்பாளர்களாக இரு ஈழத் தமிழர்கள்..!

0

சுவிட்சர்லாந்து விளையாட்டுத் துறை அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர், இளையவர் மற்றும் வளர்ந்தவர்களுக்கான விளையாட்டுக்கள் சம்பந்தமான பயிற்றுவிப்பாளர்களாக சென்செய் காஜா தாசன், செம்பாய் தனு தங்கவேலு ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


இத் தகவலை சுவிஸ் விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந் நிலையில் குறித்த இருவருக்கும் பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


குறித்த ஈழத் தமிழர்கள் இருவருக்கும் உலகத் தமிழரின் உரிமைக் குரலாக உலகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் தமிழ் பொறியும் தனது இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.