க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு இறுதி செய்யும் பணிகள் பூர்த்தி..!

0

2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கணினி மயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்து வருவதாக பரீட்சை திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.


இந்த நடவடிக்கைகள் முழுமை பெற்ற பின் பெறுபேறுகள் வெளியிடப்பட இருப்பதாக ஆணையர் நாயகம் மேலும் தெரிவித்தார்.


இதேவேளை இம்மாத இறுதிக்குள் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன.