உண்மையை பகிரங்கப் படுத்தியதால் பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு இடமாற்றம்???

0

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.தேவநேசன் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் தற்போதுள்ள மிக நெருக்கடியாக சூழலிலும் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரது கவனமும் திரும்பியுள்ளது.


இதேவேளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அண்மையில் ஊடகங்களை சந்தித்து சுவிஸ் போதகரே யாழ்.மாவட்டத்தின் இன்றைய அவல நிலமைக்கு காரணம் என பகிரங்கமாக கூறியிருந்தார். அதனை எமது தமிழ்பொறி ஊடகமும் வெளிப்படுத்தியிருந்தது.


அத்துடன்,யாழ்.மாவட்டத்தின் சுகாதாரத் துறை குறித்தும் பல கருத்துக்களை கூறியிருந்த நிலையில் உள்வீட்டு சதியாலேயே அவர் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.


தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்நிலையில் குறித்த விடயம் தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


இவ்வாறா தொடர் சதிகளாலும், குழி பறிப்புக்களாலுமே தமிழருக்கு இந்த அவல நிலை தொடர்கின்றது.