கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்கள் மற்றும் லொக்டவுண் செய்யப்பட்ட சில இடங்களில் மருந்தகங்களை திறக்காதிருக்கவும் , ஏனைய பகுதிகளில் தினமும் காலை 9 மணி முதல் 5 மணி வரை நாளாந்தம் மருந்தகங்களை திறக்கவும் அரசு தீர்மானித்தது.
இதனால் மருந்துப் பொருட்களை பெற முண்டியடிக்க தேவையில்லை எனவும் ஒன்லைன் மூலமாகவும் மருந்துப் பொருட்களை பெறலாமெனவும் அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை திட்டமிட்டபடி வரும் 20 ஆம் திகதி பாடசாலைகளை திறக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
அத்துடன் இன்று முதல் அரிசிக்கான சில்லறை விலை (Maximum Retail Price for rice effective from today) – per 1kg
White/Red raw- Rs.85
Samba- Rs.90
Nadu- Rs.90
Keeri Samba- Rs.125