மனநலம் பாதிப்படைந்த 13 வயது சிறுமியை சீரழித்த மொட்டு பிரதேச சபை உறுப்பினர் கைது..!

0

மனநலம் பாதிப்படைந்த 13 வயது சிறுமியொருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச் சாட்டுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தன்மல்வில பிரதேச சபை உறுப்பினர் உட்பட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை எம்பிலிபிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, நீதிவான் அவர்களை ஏப்ரல் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தில் 17 – 70 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிரிவேவா பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ள நிலையில் குறித்த சிறுமி தற்போது ஹம்பாந்தோட்டை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந் நிலையில் இச் சம்பவத்தை தனது டுவிட்டர் பதிவில் கண்டித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்த விசாரணையில் அரசியல் தலையீடுகள் எதுவும் இடம் பெறாது எனவும் உத்தரவாதம் அளித்துள்ளார்.