ஆறு மாவட்டங்கள் தவிர்ந்த 19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தல் தொடர்பான அறிவிப்பு..!

0

கொழும்பு, புத்தளம், கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்து ஏனைய 19 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை வியாழக் கிழமை தளர்த்தப்படுகின்றது.


நாளைய தினம் பொது மக்களுக்கு காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள அனுமதியுண்டு.


கொரோனா வைரஸ் பரவலை அடுத்து நோய்ப் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த அரசாங்கம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துள்ள நிலையில் கொழும்பு, புத்தளம், கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்து ஏனைய 19 மாவட்டங்களுக்கு அவ்வப்போது ஊரடங்கு சட்ட தளர்வு காலமும் வழங்கப்படுகின்றது.


இந்நிலையில் நாளைய தினம் 19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்க்கப்படுகின்றது. வழமையாக எட்டு மணி நேரம் மாத்திரம் வழங்கப்படும் ஊரடங்கு தளர்வு காலம் நாளை தினம் 10 மணி நேரம் வழங்கப்படவுள்ளது.


அதேவேளை கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


அத்துடன் மன்னார் மாவட்டத்தின் தாராபுரம் மறு அறிவித்தல் வரும் வரை முடக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.