அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளி இனங் காணப்பட்டார்..!

0

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுள்ள ஒருவர் முதன் முறையாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் கண்டறியப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அண்மையில் இந்திய சென்று வந்திருந்த இவருக்கு கொரோனா தொற்றியிருப்பது மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக அக்கரைப்பற்று செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் சிகிச்சைக்காக வெலிக்கந்தைக்கு அனுப்பப்படவுள்ளதாக அறிய முடிகின்றதது.


முன்னதாக இவர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்று திரும்பியதாகவும் 14 நாட்கள் கழிந்த பின்னரே இவருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.


தனிமைப்படுத்தல் முடிந்து வீடு திரும்பிய இவர் பலருடன் பழகி இருப்பதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க சுகாதார தரப்பு தயாராகி வருகிறது. இவருடன் இந்தியா சென்று திரும்பிய மேலும் 7 பேர் தொடர்பிலும் ஆராயப்படுகிறது.