கொரோனா அச்சம்; வன்னியின் முன்னாள் பிரதி அமைச்சர் சுய தனிமைப்படுத்தலில்..!

0

முன்னாள் பிரதி அமைச்சரும், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் வவுனியாவில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


இன்று காலை சுகாதார பரிசோதகர்களால் அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார், தாராபுரம் பகுதியில் கடந்த 18 ஆம் திகதி இடம் பெற்ற மரணச் சடங்கில் கலந்து கொண்ட புத்தளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஓருவர் கொரனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.


இதனையடுத்து மன்னார், தாராபுரம் கிராமம் சுகாதார பரிசோதகர்களால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மணச் சடங்கில் கலந்து கொண்ட முன்னாள் பிரதி அமைச்சரும், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான், அவரது சகோதரர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் கலந்து கொண்டிருந்தனர்.


இதன் காரணமாகவே, முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், அவரது சகோதரர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் ஆகியோரை முன்னாள் பிரதி அமைச்சர் மஸ்தான் அவர்களின் வவுனியா வீட்டில் தனிமைப் படுத்தியுள்ளார்கள்.