கடந்த 24 மணித்தியாலத்தில் 1,815 பேர் கைது; 595 வாகனங்களும் பறிமுதல்..!

0

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக கடந்த 24 மணித்தியாலத்தில் பொலிசாரால் 1,815 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 595 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 19 நாட்களுக்குள் 17,717 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை 6 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு கால அவகாசம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு , கம்பஹா, களுத்துறை, கண்டி,புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவிக்கும் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் முற்றகாக முடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.