ஜனாதிபதி கோட்டாவிற்கு கொரோனா; வதந்தி பரப்பிய நடன ஆசிரியை சிறையில்..!

0

கடந்த ஏப்ரல் முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு விட்டதாக முகப் புத்தகத்தில் பதிவு செய்த நடன ஆசிரியை விளக்கமறியலில் வைகப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அப்போது அவருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டதாகவும் குறித்த ஆசிரியை பதிவிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.


இதனையடுத்து அவர் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.


இந்நிலையில் அவர் நேற்றைய தினம் கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.