கொரோனாவினால் மற்றுமொரு நபர் பலி; பலி எண்ணிக்கை ஆறாக உயர்வு..!

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


ஐ.டி.எச் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.


இலங்கையில் இதுவரை 180 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 134 பேர் தற்போதும் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.


38 பேர் இதுவரை குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதுடன் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.