சுவிஸ் போதகராலேயே இந்த நிலை; மனந் திறந்தார் பிராந்திய சுகாதார பணிப்பாளர்..!

0

இலங்கையிலும் கொரோனா தொற்று இனம் காணப்பட்டதும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என சுமார் 1300 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தி வைத்திருந்தோம்.


அந்த நேரத்தில் சுவிஸிலிருந்து வருகை தந்த மதபோதகரால் பிரச்சினை ஆரம்பித்தது என யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலமையை வைத்துக் கொண்டு தொற்று இல்லை எனக் கூற முடியாது.


அரியாலை ஜெபக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் நல்ல உடல் நிலையோடு விடுவிப்பதற்கு தயாரான நிலையில் இருந்தவர்கள். எனினும் பரிசோதனையின் பின்னர் அவர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


ஆகவே யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று இனித் தீவிரமடைந்தால் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


எனினும் தற்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் இருந்ததைவிட மக்கள் கொரோனா வைரஸ் பற்றி விழிபுணர்வு அடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.