இத்தாலிய கப்பலில் இருந்து தன்னை மீட்குமாறு கோரிய அனுர மீட்பு..!

0

இத்தாலிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த இளைஞர் 21 நாள் தனிப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பு உட்படுத்தப்பட்டுள்ளார்.


MSC Magnifica கப்பலில் இருந்த இலங்கையரான அனுர ஹேரத்தை கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


அத்துடன் இவர் பூஸ்ஸ கொரோனா தடுப்பு மருத்துவ கண்காணப்பு முகாமிற்கு தனிப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்து செல்லப் பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


அனுர ஹேரத் இந்த கப்பலில் சமையல் கலைஞராக பணியாற்றினார்.


இவர் தன்னை இலங்கையில் தரையிறங்க அனுமதிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விடுத்த கோரிக்கையின்படி, இவர் கடற்படையினரால் மீட்கப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.