ஊரடங்கு தளர்த்தலில் புதிய மாற்றம்; விசேட அறிவிப்பு வெளியாகியது..!

0

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு தளர்த்தல் தொடர்பான விசேட அறிவிப்பு சற்று முன்னர் வெளியாகியது


அந்த வகையில் கொழும்பு , கம்பஹா ,களுத்துறை , கண்டி , யாழ்ப்பாணம் , புத்தளம் ஆகிய ஆறு மாவட்டங்களை தவிர ஏனைய 19 மாவட்டங்களில் வியாழன் 9 ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு அன்று பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை கொழும்பிலிருந்து வெளி மாவட்டத்தவர்கள் முதற் கட்ட மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் ரயில் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு விரைவில்அனுப்பி வைக்கப்படுவார்கள்.இது தொடர்பில் இன்று கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற. “கொரோனா நிலைமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு’ கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது