யாழில் கொரோனா அச்சத்தில் இன்று வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டவர் மரணம்..!

0

கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ் மந்திகை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.


இன்று அதிகாலை 2 மணிக்கு மந்திகை வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.


பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய குறித்த நபர் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்போடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.


அவரது உயிரிழப்புக்கு கோரோனா தொற்று காரணமாக இருக்கலாமா? என்று பரிசோதனை செய்வதற்கு இரத்த மாதிரிகள் பெறப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.


குறித்த நபர் வீசிங் நோயாளி. கடந்த மூன்று நாட்களாக அவருக்கு காய்ச்சல், தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் இன்று அதிகாலை மந்திகை வைத்திய சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். எனினும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.


அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு கோரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது” என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.