நாடு முழுவதுமாக முடக்கம்; போலிச் செய்தி தொடர்பில் CID விசாரணை ஆரம்பம்..!

0

நாடு முழுவதுமாக முடக்கப்படவுள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


இவ்வாறு பரப்பப்படும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அவற்றை நம்ப வேண்டாம் என்றும் அவர் பொது மக்களை கேட்டுள்ளார்.


உள் வீதிகளில் போக்குவரத்து செய்வது, சந்திப்பை மேற்கொள்வது என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.


அவ்வாறான நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.