இலங்கையில் புத்தாண்டுடன் ஊரடங்கை முழுமையாக நீக்கத் திட்டம்..!

0

இலங்கையில் தற்போது கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க இன்று இரவு உறுதி செய்தார்.


மேலும் மக்களின் நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் புத்தாண்டின் பின்னர் கொரோனா அபாயம் அற்ற மாவட்டங்களில் ஊரடங்கை முழுமையாக நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .


இதேவேளை உலகளாவிய கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 63,000 ஐ தாண்டியுள்ளது. அத்துடன் இலங்கையில் இதுவரை 5 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.