வாடிக்கையாளர்களின் தொலைபேசி சேவைகளை துண்டிக்க வேண்டாமென கோரிக்கை..!

0

தற்போதைய கொரோன அவசர கால நிலைமையில் தொலைத் தொடர்பு கட்டணங்களை செலுத்துவதில் வாடிக்கையாளர்களுக்கு தாமதங்கள் ஏற்படக் கூடும்.


எனவே மக்களுக்கு தொடர்பாடல் வசதிகளை தொடரக் கூடிய வகையில் அவர்களின் தொடர்பாடல் சேவைகளை துண்டிக்க வேண்டாமென இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு கையடக்க தொலைபேசி மற்றும் நிலையான தொலைபேசி தொடர்பாடல் சேவை நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.


இந்த சலுகைகளை ஏப்ரல் இறுதி வரையில் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு அந்த நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.