இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு..!

0

இலங்கையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

இன்றைய தினத்தில (4) இலங்கையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு இடம் பெற்ற 5ஆவது மரணம் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க உறுதி செய்த தகவல்கள் பின்வருமாறு,
இன்று பலியானவர் வயது 44 ஆண் நபர். இவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர். இத்தாலியில் இருந்து வந்த இவர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்குள் உள் வாங்கப்பட்டவர்.
கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி வெலிகந்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ஏனைய நோய்களினால் இவர் பீடிக்கப் பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரை இலங்கையில் 159 கொரோனா நோயாளர்கள் இனங் காணப் பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.