யாழில் உள்ள வெளி மாவட்டத்தவர்கள் யாழில் இருந்து வெளியேறச் சந்தர்ப்பம்..!

0

யாழிற்கு தொழில் நிமித்தமோ பிற தேவைகளுக்காகவோ சென்ற நிலையில் ஊர் திரும்ப முடியாது தவிப்பவர்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் யாழில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அவ்வாறு தங்கியிருப்பவர்கள் தமது பகுதிகளில் உள்ள கிராம அலுவலர்களிடம் தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.


அதன் பின்னர் சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் பதிவு செய்யும் நபர்களின் உடல் நிலை குறித்த சான்றிதழ்களை கையளிப்பார்கள்.


பின்னர் இராணுவத்தினர் தமது பாதுகாப்புடன் குறித்த நபர்களை தத்தமது ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிய வருகிறது.


இந்நிலையில் உணவு உட்பட்ட பல்வேறு நெருக்கடிகளை யாழில் எதிர் கொண்டு வருகின்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த விடயம் தொடர்பில் உடனடியான நடவடிக்கைகளில் ஈடுபடுதவதன் மூலம் சிரமங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.