இலங்கையில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் கொரோனா; நோயாளர்கள் 159 ஆக உயர்வு..!

0

இன்றைய தினம் கொரோனா வைரசு தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட 9 நோயாளிகள் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


இதற்கமைவாக மொத்த கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் இந்த வைரசு தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வைத்திய சாலையில் இருந்து வெளியேறிய நோயாளர்களின் எண்ணிக்கை 24 ஆகும்.


இதே போன்று இதுவரை 4 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.