ஊடகவியலாளர்கள் அறுவருக்கு கொரோனா தொற்று சந்தேகம்..!

0

கொழும்பில் இயங்கும் இரண்டு பிரதான ஊடகங்களைச் சேர்ந்த ஆறு ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


இதனையடுத்து குறித்த ஆறு ஊடகவியலாளர்கள் உட்பட 8 பேர் சுய தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


விஜய நியூஸ் பேப்பர் மற்றும் மவ்பிம ஆகியவற்றில் கடமையாற்றும் இரண்டு ஊடகவியலாளர்களும், நான்கு புகைப்பட ஊடகவியலாளர்களும், அவர்கள் பயணித்த வாகனத்தின் இரண்டு சாரதிகளுமே இவ்வாறு தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.களுத்துறை அட்டுளுகம பகுதிக்குள் சென்று செய்தி சேகரித்தமையே, தனிமைப்படுத்தப் பட்டுள்ளமைக்கான காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


சாரதிகள் இருவரும் நிறுவனங்களுக்கு சொந்தமான வீடொன்றிலும், ஏனையோர் தமது வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.