வவுனியாவில் மரணமான பெண்ணின் மருத்துவ அறிக்கை வெளியாகியது..!

0

வவுனியா பொது வைத்திய சாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணித்த வயோதிபப் பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, கற்குழியைச் சேர்ந்த அருட்செல்வன் கலாராணி (வயது 56) என்ற குடும்ப பெண் காய்ச்சல் காரணமாக நேற்று இரவு வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா தொற்று உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பெண்ணுக்கு மருத்துவர்கள் தனிமைப் படுத்தி சிகிச்சையளித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்ற சந்தேகத்தில் அவருடைய இரத்த மாதிரிகள் பெறப்பட்டு அனுராதபுரம் வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை ஆய்வு செய்த மருத்துவர்கள் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை மாறாக நிமோனியா காய்ச்சல் என்பதை உறுதிப் படுத்தியுள்ளனர்.
இதேவேளை வவுனியா கூமாங்குளத்தில் 4 குடும்பங்களும், உக்கிளான் குளத்தில் ஒரு குடும்பமும் கொரோனா அச்சம் காரணமாக குடும்பமாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

இதேவேளை இதுவரை யாழில் 4 நோயாளர்களும், நாடளாவிய ரீதியாக 150 நோயாளர்களும் இனங் காணப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.