உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்; பயங்கரவாத குழுவிற்கு உதவிய இருவர் கைது..!

0

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்ததன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று வியாழக் கிழமை கொத்தொட்டுவ மற்றும் மட்டக்குளிய ஆகிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் சினமன் கிராண்ட் ஹோட்டல் மற்றும் கொச்சிக்கடை தேவாலயம் ஆகிய இடங்களில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவர்களுக்கு போக்குவரத்து வசதி மற்றும் ஏனைய உதவிகளை செய்துள்ளதாக தெரிவித்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிக்கு உதவிய ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.