கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதில் அரசு உறுதி..!

0

கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் அரசு உறுதியாக இருப்பதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.


சர்வதேச சட்ட திட்டங்களுக்கமைய இந்த நிலைப்பாட்டையே எடுக்குமாறு அரச சட்ட மருத்துவ அதிகாரிகள் அரசிடம் வலியுறுத்தி உள்ளதையடுத்து அரசு இந்த தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக சொல்லப்பட்டது.


சற்று முன்னர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன , சுகாதார தரப்பின் ஆலோசனைகளுக்கு அமையவும் சர்வதேச அமையங்களுக்கு ஏற்பவும் இந்த முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் எல்லோருக்கும் சட்டம் பொதுவானதென்றும் தெரிவித்துள்ளார்.


உயிர் கொல்லி கொரோனா தொடர்பில் இதே நிலைப்பாட்டையே அண்மையில் ஜேவிபி எடுத்திருந்தது.


இதேவேளை சற்று முன்னர் இரண்டாவது முஸ்லீம் நபரின் உடலும் தகனம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.