யாழ் சென்று வந்த வயோதிபப் பெண் திடீர் மரணம்; கொரோனாவா என சந்தேகம்..!

0

வவுனியா வைத்திய சாலைக்கு காய்ச்சல் காரணமாக நேற்றைய தினம் (01) அனுமதிக்கப்பட்ட வயோதிபப் பெண் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்ததை அடுத்து அவரின் இரத்த மாதிரி அனுராதபுரம் கொரோனா தடுப்பு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருப்பதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


இது குறித்து மேலும் தெரிய வருவதாவது.

வவுனியா சேர்ந்த அருட்செல்வன் கலாராணி (வயது 56 ) வயோதிபப் பெண்மணி ஒருவர் இரண்டு வாரங்கள் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டதாகத் தெரிவித்து உறவினர்களால் வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அனுமதித்தவர்களிடம் மருத்துவர்கள் விசாரித்ததன் அடிப்படையில், இரண்டு வாரங்கள் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டதாகவும், இரண்டு கிழமைக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்று வந்ததாகவும், யாழில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பைப் பேணியதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரின் நோய் அறிகுறிகளை விசாரித்த மருத்துவர்கள் கொரொனா தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பு விடுதிக்கு அவரை மாற்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.


சம்பவத்தை அடுத்து குறித்த பெண்ணின் இரத்த மாதிரிகள் அனுராதபுரம் வைத்திய சாலைக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னரே மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என வவுனியா பொது வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.